தவக்கால திருப்பயணம் 2019
புலியூர் அற்புத குழந்தை இயேசு திருத்தல இறைமக்கள் சார்பாக தவக்கால திருப்பயணமாக கோவை மறைமாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு திருநிலைபடுத்தபட்ட15 ஆலயங்களுக்கு கடந்த சனிக்கிழமை (06.04.2019) அன்று திருப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
புலியூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் இருந்து அதிகாலை சுமார் 04 .00 மணிக்கு பங்குதந்தையின் ஜெபத்துடன் பேருந்து புறப்பட்டது.காலை 06.00மணிக்கு ஈரோடு தூய அமல அன்னை ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை வரவேற்று காலை திருப்பலி நிறைவேற்றினார். தேநீர் உபசரிப்புக்கு பின் அங்கு இருந்து கிளம்பி கோபிசெட்டிபாளையம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு சென்று அங்கு சிலுவை பாதையின் முதல் நிலை செபிக்கப்பட்டது. பின் பங்கு தந்தை தம்பிதுரை அவர்கள் ஏற்பாடு செய்திருந்த காலை சிற்றுண்டி முடித்துவிட்டு பவானிசாகர் நோக்கி பயணித்து அங்கு உலக ரட்சகர் ஆலயத்தில் சிலுவைப்பாதையின் இரண்டாம் நிலை செபிக்கப்பட்டது. மூன்றாம் நிலையாக பவானிசாகர் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் செபிக்கப்பட்டது.அங்கு இருந்து கிளம்பி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் சிலுவைப்பாதையின் நான்காம் நிலை செபிக்கப்பட்டது. பின் அன்னூர் அடைக்கல மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதையின் ஐந்தாம் நிலை செபிக்கப்பட்டது.அடுத்த பயணமாக கோவை விமானநிலையம் அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையின் ஆறாம் நிலை செபிக்கப்பட்டது.அடுத்த நிலைக்காக கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கில் கத்திற்றல் பேராலயத்திற்கு சென்று ஏழாம் நிலை செபிக்கப்பட்டது. அங்கு மதிய உணவுக்குபின் மீண்டும் பயணத்தை துவங்கி கண்ணம்பாளையம் அடைக்கல மாதா ஆலயத்தில் எட்டாம் நிலை செபிக்கப்பட்டது.சிறிய பயணத்திற்குபின் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை அருள்தலத்தில் ஒன்பதாம் நிலை செபிக்கபட்டது.சிறிய தேநீர் விருந்திற்க்குபின் சோமனூர் புனித இன்னசியார் ஆலயத்தில் சிலுவைப்பாதையின் பத்தாம் நிலை செபிக்கப்பட்டது.பின் அங்கிருந்து பயணித்து பூமனூர் புனித அந்தோனியார் திருத்தலத்தில் பதினொன்றாம் நிலை செபிக்கப்பட்டது.அடுத்த நிலைக்காக பயணித்து புக்கிளிபாளையம் புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தில் பணிரெண்டாம் நிலை முடித்துவிட்டு பல்லடம் நோக்கி பயணித்து ஆரோக்கிய மாதா ஆலயம் மாதா கெபியில் பதிமூன்றாம் நிலை செபிக்கப்பட்டது. சிலுவைப்பாதையின் இறுதி நிகழ்வாக காங்கேயம் குறைகள் தீர்க்கும் குழந்தை மாதா ஆலயத்தில் பதினான்காம் நிலை செபித்துவிட்டு ஆலய பங்கு தந்தை தந்த இரவு சிற்றுண்டியை முடித்து விட்டு புலியூர் நோக்கி பயணித்து நள்ளிரவு சுமார் 01.30 மணிக்கு திருத்தலத்தை அடைந்தோம் .இத்திருப்பயணம் ஏற்பாடுகளை அருட்தந்தை ஞானபிரகாசம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தி மற்றும் படங்கள் பாவாணர் படமனை :- 9655636070, 9443363587
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக