செவ்வாய், 23 ஏப்ரல், 2019

         ஈஸ்டர் பெருவிழா 2019

                 ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு அற்புத குழந்தை இயேசு திருத்தலம் புலியூரில்  19.04.2019 அன்று இரவு11 மணியளவில்  திருவிலிப்பு சடங்கானது  4 பெரும் பகுதிகளை கெண்டதாக அமைந்தது . 


 1.புது தீ உருவாக்குதல் 





 2.இறைவார்த்தை வழிபாடு
  3. திரு முழுக்கு வழிபாடு


















   
 4. திரு விருந்து  வழிபாடக அமைத்து பங்கு  தந்தை  அந்தோணி ஞானப்பிரகாசம் அவர்கள்  புதிய தீயினை  உருவாக்கி அதிலிருந்து புதிய பாஸ்கா  மெழுகுதிரியை ஏற்றினார்கள். அதனை தொடர்ந்து சிற்றாலயத்தில் இருந்து பவனியாக  பெரிய  ஆலயத்திற்குள்  வந்து இறைவாக்கு வழிபாடு நிறைவேற்ற பட்டது. அதனை தொடர்ந்து வானவர் கீதம் பாடி  இயேசுவின்  உயிர்ப்பு  நிகழ்வானது நடைபெற்றது அதனை தொடர்ந்து மறையுறைக்கு பின்னர்  புதிய  தண்ணீர் மந்திரிக்க பட்டு  திருமுழுக்கு  வார்த்தை  பாட்டை மெழுகுதிரியை கையில்  ஏந்தி புதுப்பிக்கபட்டபின் திருப்பலி  நிறைவேற்ற பட்டது.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

                                  புனித வியாழன் நிகழ்வுகள்

                              18.02.2019 புனித வியாழன் அன்று அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில்  இயேசு கிறிஸ்து குருத்துவத்தையும்,நற்கருணையையும் ஏற்படுத்தியதன் நினைவாக புனித வியாழன் நிகழ்வு திருப்பலியுடன் துவங்கியது. திருப்பலியின் மறையுரை  நிகழ்வுக்கு பின்னர் பன்னிரெண்டு திருத்தூதுவர்களை   தெரிவு செய்து அவர்களின் பாதங்களை பங்கு தந்தை அருட்பணி அந்தோணி ஞானபிரகாசம் அவர்கள் கழுவி முத்தம் செய்த பின்னர் திருப்பலியானது தொடர்ந்து நிறைவேறியது.அதனை தொடர்ந்து புதிய நற்கருணை பீடத்தில் இருந்த பேழையில் நற்கருணை வைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிவரைஆராதனையுடன் அன்றைய நாள் நிகழ்வு நிறைவேறியது.











                                       புனித வெள்ளி நிகழ்வுகள் 

                             19.04.2019 இன்று  புனித வெள்ளி நிகழ்வாக ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் பொருட்டு கல்வாரி பாடுகளை சிலுவை பாதையின் வடிவில்  காலை 11  மணிக்கு நடத்தப்பட்டது.பின் மதியம் சுமார் 01 மணிக்கு ஆலயத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது அதன் பின் 03 மணிக்கு மூன்று பிரிவுகளாக  திருச்சடங்குகள்   நடைபெற்றது முதலில் இறைவார்த்தை வழிபாடு,இரண்டாவது திருச்சிலுவை ஆராதனை, மூன்றாவது திருவிருந்து வழிபாடு இவைகளுடன் இன்றைய புனித வெள்ளி நிகழ்வு சடங்குகள் நிறைவேற்றப்பட்டது.






















செய்தி & படங்கள்:- பாவாணர் படமனை-9655636070,9443363587