ஞாயிறு, 8 ஜனவரி, 2023

2023 பெருவிழா கொண்டாட்டம் - மாலை

 2023 பெருவிழா கொண்டாட்டம் - மாலை - ஒரு தொகுப்பு 


 



























































கோவை மறைமாவட்டம், தாராபுரம் மறைவட்டத்தில் உள்ள புலியூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா மற்றும் தேர்திருவிழா பங்குத்தந்தை மற்றும் இறைமக்களால் சீறும் சிறப்புடன் செபத்தோடும் ஆசீர்வாதங்களோடும் நடைப்பெற்றது. புலியூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் 9 வார சிறப்பு ஆராதனை திருப்பலிகள் நடைப்பெறும். அதுபோல் இவ்வாண்டும் கடந்த 2022ம் வருடம் நவம்பர் மாதம் 10ம் தேதி வியாழன் முதல் ஒன்பது வார சிறப்பு நவநாள் வாரம் சிறப்பிக்கப்பட்டு டிசம்பர் 29-ம் தேதி வியாழன் அன்று கொடியேற்றத்தோடு பெருவிழா கொண்டாட்டம் துவங்கியது. இவ்வாண்டு 2023 ஜனவரி 5,6,7 ஆகிய நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைப்பெற்றது. அதன்பின் நேற்று (08-01-2023) ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்கு அருட்தந்தை. அந்தோணி முத்து ஆல்பெர்ட் தலைமையில் கூட்டுப்பாடற்திருப்பலியும் வேண்டுதல் தேர்பவனியும் நடைப்பெற்றது. மாலை 05:30மணிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்திரு. ஜான் ஜொசப் தனிஸ் தலைமையில் தாராபுர மறைவட்ட, கோவை மறைமாவட்ட மற்றும் தோழமை குருக்களோடு இணைந்து கூட்டுப்பாடற் திருப்பலியும் அதனை தொடர்ந்து மின் அலங்கார தேர்பவனியும் நற்கருணை ஆசீர்வாதம் நடைப்பெற்றது. இதில் பல மக்கள் பக்தியோடு பங்கெடுத்து அற்புத குழந்தை இயேசுவின் ஆசீரையும் அருளையும் பெற்றுச்சென்றார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக