புதன், 23 நவம்பர், 2022

மூன்றாம் நவநாள் வாரம் 24-11-2022 காலை அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் மூன்றாம் நவநாள் வாரம் -Fr. பீட்டர் மரியதாஸ்,கோவை

 24-11-2022 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் மூன்றாம் நவநாள் வாரம் - Fr. பீட்டர் மரியதாஸ், பங்குத்தந்தை, சேரன் மாநகர், கோவை காலை ஜெபமாலை, ஆராதனை, திருப்பலி, மறையுரை, நவநாள், வேண்டுதல் தேர்பவனி தலைப்பு - சோதனை வெல்ல உடன் இருப்பவர் 

 சிறப்பிக்கும் குடும்பங்கள்

அலெக்ஸ் ராஜ் (Late), ஸ்டெல்லா மேரி குடும்பத்தார்

டேவிட்ஜானசேகரன்(Late), மதலின் ஜோதி  குடும்பத்தார்

ரூபன் டேவிட், ஆரோக்கிய மேரி குடும்பத்தார்

ஜோசப் .யு, ஜெசிந்தா தனபாய் (Late) குடும்பத்தார்

ஜான் கென்னடி, நிர்மலா மேரி குடும்பத்தார்

அடைக்கலசாமி, அமலி இருதயமேரி குடும்பத்தார்

ஸ்டீபன் பு‘;பராஜ், ஜெனோவா அடைக்கலமேரி குடும்பத்தார்

வில்லியம் அசோகன், செல்வமரிய ஸ்டெல்லா குடும்பத்தார்

 

 


 

 

 
 
 


புதன், 16 நவம்பர், 2022

இரண்டாம் நவநாள் 17-11-2022 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் இரண்டாம் நவநாள் வாரம் -Fr. சுவக்கீன் OMI, திண்டுக்கல்

 17-11-2022 அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் இரண்டாம் நவநாள் வாரம் -Fr. மரிய சுவக்கீன் OMI, திண்டுக்கல்

சிறப்பிக்கும் குடும்பங்கள்

இருதயசாமி குடும்பத்தார்                    

திவ்யநாதன், மேரி ராணிபாய் குடும்பத்தார்

ஜஸ்டின் சுரேஷ், மேரி மெர்லின் குடும்பத்தார்

ஜஸ்டின் பிரகாஷ், பொன்மலர்  குடும்பத்தார்

ஜான்சன், அமலி அனித்தா குடும்பத்தார்

பிரிட்டோ ஆரோக்கியநாதன், லில்லி விமலா குடும்பத்தார்

ராஜன் வர்க்கீஸ் , ஷைனி K இபென் குடும்பத்தார்

 



வியாழன், 10 நவம்பர், 2022

முதல் சிறப்பு நவநாள் 10-11-2022

முதல் சிறப்பு நவநாள் 10-11-2022 வியாழன் முதல் சிறப்பு நவநாள் 

கருத்து : அற்புத குழந்தை இயேசு நலம் நல்கிறவர் 

வழிநடத்துபவர் : அருட்தந்தை. கிருபாகரன் அடிகளார், பங்குத்தந்தை. சங்ககிரி, சேலம் மறைமாவட்டம்

  இன்று திருப்பலி சிறப்பிக்கின்ற குடும்பங்கள் ஜெர்மன் ஜோசப் அந்தோணி சகாயராணி சகாய டென்னிஸ் பாபு சோபியா ஜோசப் ஆரோக்கியசாமி பெல்சிட்டா குழந்தை தெரசா ஆரோக்கிய ஜெயசீலன் ஹெலன் பிரியா ஜோசப் ராஜேந்திரன் ஜெசிந்தா மேரி தேவசகாயம் ரோஸ்லின் செபஸ்தியம்மாள் ஜெரால்டு ஆரோக்கியராஜ் டாரத்தி ஷீலா 

 


 

 https://youtu.be/Hp5V2oqgAXU

 


 

https://youtu.be/WiFRvge-Nu8 



வெள்ளி, 4 நவம்பர், 2022

பெருவிழா நவநாள் அழைப்பிதழ் 2022-2023

 

பெருவிழா நவநாள் அழைப்பிதழ்

 நமது திருத்தல பெருவிழா நவநாட்கள் 2022 நவம்வர் மாதம் 10ம் தேதி (வியாழன்) முதல் 9 வார சிறப்பு நவநாட்கள் நடைப்பெறுகிறது. அனைவரும் வாருங்கள். அற்புத குழந்தை இயேசுவின் அருளையும் ஆசிரையும் பெறுங்கள்...

 



திங்கள், 31 அக்டோபர், 2022

தொடர் ஜெபமாலை 31-10-2022 மாலை 3:00 மணி முதல் மாலை 6:00மணி

 மரியாயின் சேனை அங்கத்தினர் மற்றும் அருட்சகோதரிகள் இணைந்து 31-10-2022 திங்கள் மதியம் மூன்று மணி முதல் தொடர் ஜெபமாலை செய்துதார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.   மாலை 6 மணிக்கு மீண்டும் ஜெபமாலை செபிக்கப்பட்டது. அதில் மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் செபகருத்துக்களோடு செபிக்கப்பட்ட செபகருத்துகளை வைத்தும், அனைத்து அன்பிய குடும்பங்களுக்காகவும் பக்தர்களுக்காகவும் செபமாலை செபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்றாட்டு மாலையும் திருப்பலியும் நடைபெற்றது.  மாதாவின் உடைய ஜெபமாலை இந்த மாதம் முழுவதுமாக அருட் சகோதரிகளும் மரியாயின் அங்கத்தினரும் ஒவ்வொரு வீடாக சென்று மாதாவை வைத்து ஜெபமாலை ஜெபித்தார்கள் இறுதியாக ஆலயத்தில் அனைவருடைய கருத்துக்களுக்காகவும் இன்று மாலை ஆறு மணிக்கு ஜெபமாலை ஜெபித்தார்கள். இறைமக்களும் வருகை புரிந்து இந்த ஜெபமாலையில் பங்கெடுத்தார்கள். திருப்பலியிலும் பங்கெடுத்து இறைவனுடைய ஆசிரையும் பெற்றார்கள். அனைத்து அருட்சகோதரிகளுக்கும், மரியாயின் சேனை அங்கத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் இறைவனின் ஆசீரும் மரியாவின் பரிந்துரையும் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக!. நன்றிகள். 

பங்குத்தந்தை.

 

 






வெள்ளி, 28 அக்டோபர், 2022

கல்லறைத் தூய்மை 29-10-2022

 இறையேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, இறைவனின் ஆசீரும் அருளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக! சனிக்கிழமை (29-10-2022) காலை 06:00 மணிக்கு நமது கல்லறைத்தோட்டத்தினை சுத்தம் செய்ய வரும்படி அன்போடு கேட்டுக்கொண்டேன். முடிந்தவர்கள் வருகைப்புரிந்து சுத்தம் செய்து 3 மணி நேரத்தில் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டார்கள். இது ஒரு மகத்தான ஆன்மீகக் காரியம். ஆகவே வருகைப்புரிந்து சுத்தம் செய்து தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  ஆகவே உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றிகளும் இறைவனின் ஆசீரும் 
இப்படிக்கு பங்குத்தந்தை


சுத்தம் செய்யும் முன்

சுத்தம் செய்யும் போது
 
சுத்தம் செய்தபின் 

 

சுத்தம் செய்யும் முன்னும் செய்யும்போதும் செய்த பின்னும் விடியோக்கள்