வெள்ளி, 19 ஏப்ரல், 2019

                                  புனித வியாழன் நிகழ்வுகள்

                              18.02.2019 புனித வியாழன் அன்று அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில்  இயேசு கிறிஸ்து குருத்துவத்தையும்,நற்கருணையையும் ஏற்படுத்தியதன் நினைவாக புனித வியாழன் நிகழ்வு திருப்பலியுடன் துவங்கியது. திருப்பலியின் மறையுரை  நிகழ்வுக்கு பின்னர் பன்னிரெண்டு திருத்தூதுவர்களை   தெரிவு செய்து அவர்களின் பாதங்களை பங்கு தந்தை அருட்பணி அந்தோணி ஞானபிரகாசம் அவர்கள் கழுவி முத்தம் செய்த பின்னர் திருப்பலியானது தொடர்ந்து நிறைவேறியது.அதனை தொடர்ந்து புதிய நற்கருணை பீடத்தில் இருந்த பேழையில் நற்கருணை வைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிவரைஆராதனையுடன் அன்றைய நாள் நிகழ்வு நிறைவேறியது.











                                       புனித வெள்ளி நிகழ்வுகள் 

                             19.04.2019 இன்று  புனித வெள்ளி நிகழ்வாக ஆண்டவரின் பாடுகளை தியானிக்கும் பொருட்டு கல்வாரி பாடுகளை சிலுவை பாதையின் வடிவில்  காலை 11  மணிக்கு நடத்தப்பட்டது.பின் மதியம் சுமார் 01 மணிக்கு ஆலயத்தில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது அதன் பின் 03 மணிக்கு மூன்று பிரிவுகளாக  திருச்சடங்குகள்   நடைபெற்றது முதலில் இறைவார்த்தை வழிபாடு,இரண்டாவது திருச்சிலுவை ஆராதனை, மூன்றாவது திருவிருந்து வழிபாடு இவைகளுடன் இன்றைய புனித வெள்ளி நிகழ்வு சடங்குகள் நிறைவேற்றப்பட்டது.






















செய்தி & படங்கள்:- பாவாணர் படமனை-9655636070,9443363587

                      குருத்தோலை ஞாயிறு

                         கடந்த 14.04.2019  ஞாயிறு அன்று காலை அற்புத குழந்தைஇயேசு திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்வானது புலியூர் கடை வீதி நால் ரோடு அருகில் இருந்து பங்கு தந்தை ஞானபிரகாசம் அவர்கள் தலைமையில் பவனியாக திருத்தலத்தை நோக்கி  குருத்தோலையுடன்  பாடல் பாடி  பவனியாக வந்தார்கள். பின்    திருத்தலத்தில் காலை திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலி முடிவில் சிற்றாலயத்தில் மாவட்ட  தலைமை அரசு  மருத்துவகல்லூரி மருத்துவமனை  மற்றும் திருத்தல தன்னார்வ இரத்ததான குழுவினர் இணைந்து  நடத்திய 10 ஆம்  இரத்ததான முகாமில் 50 நபர்கள் குருதிகொடை வழங்கினார்கள். 
               
                       சுமார் இரண்டு மணிக்கு குழந்தை இயேசு திருத்தலத்தில் இருந்து பங்குமக்கள் காங்கேயம் குறைகள் போக்கும் குழந்தை மாதா ஆலயத்தில் நடந்த பாவ பரிகார பவனியில் கலந்து கொண்டு ஆலயத்தில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் புதியதாய் அமைக்கப்பட்டிருந்த நற்கருணை சிற்றாலயத்தை மந்திரித்தார்கள். அடுத்த நிகழ்வானது ஆலயத்தில் ஆயர் தலைமையில் திருப்பலி  தாராபுரம் வட்ட முதன்மைகுரு,மற்ற குருக்களும் இணைந்து நிறைவேற்றினார்கள் நிகழ்வின் இருதியில் அற்புத சாரல் என்ற இசை நூல் வெளியிடப்பட்டது அருள்தளம் சார்பாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.பின் அங்கிருந்து பயணித்து இரவு  11.00 மணிக்கு புலியூர் வந்து சேர்ந்தனர்.











































படம் மற்றும் செய்திகள்:- பாவாணர் படமனை 9655636070,9443363587