மறை பரப்பு ஞாயிறுவிழா
இறைவனின் நற்செய்தியினை உலகிற்கு
தெரிவிக்கும் நல் நிகழ்வை ஆண்டுதோறும் கத்தோலிக்க கிறிஸ்தவமக்கள் நவம்பர் முதல்வார
ஞாயிறை மறைபரப்பு ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி கரூர் மாவட்டம் புலியூரில்
உள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் மறை பரப்பு ஞாயிறு விழா (11.11.2018) அன்று வெகு சிறப்பாக
நடைபெற்றது. ஆலய பங்குதந்தை ஞானபிரகாசம் அடிகளார் அவர்கள் காலை 11.30 மணி திருப்பலி
நிறைவேற்றினார். பசுபதிபாளையம் பங்குதந்தை
ஹென்றிலாரன்ஸ் அடிகளார் மற்றும் நெரூர் அருட் சகோதரிகள் ஆகியோர்
இணைந்து மாலையில் பங்கு இறை மக்களுக்கான விவிலிய மற்றும் விளையாட்டு போட்டிகளை. வெகு
சிறப்பாக நடத்தினர் மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்ட
விளையாட்டு போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில்
அருட்சகோதரிகள், இறைமக்கள்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி & படம் பாவாணர் படமனை
9655636070.9443363587