திங்கள், 21 ஜனவரி, 2019


         அற்புத குழந்தை இயேசு திருத்தலம் புலியூர்             
               ஆண்டுப்பெருவிழா  2019 !!!  

    புலியூர்-கரூர்- 21.01.2019

          அற்புத குழந்தை இயேசு திருத்தலம் புலியூரில் (20.01.2019 ஞாயிறு ) நேற்று ஆண்டுப்பெருவிழா வெகு சிறப்பாக நிகழ்ந்தது. நிகழ்வில் காலை 11.00 மணி திருவிழா திருப்பலியை அருட்தந்தை  ததேயுஸ் குழந்தை இயேசு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் அவர்களின் தலைமையில் அருட்தந்தை வின்சென்ட் புஷ்பராஜ் அரவக்குறிச்சி மற்றும் அருட்தந்தை இருதயராஜ் வெள்ளக்கோயில் ஆகியோர் வெகு சிறப்பாக நிறைவேற்றினர்.

       


























                           





                               அதனை தொடர்ந்து மாலை 05.30 மணிக்கு  கூட்டுப்படற் திருப்பலியானது பேரருட்தந்தை ஜோசப் தனராஜ் மறைவட்ட முதன்மை குரு அவர்கள் தலைமையில் அருட்தந்தையர்கள் மரியஅந்தோணி (முன்னாள் பங்கு தந்தை) நல்லூர் திருப்பூர், சுந்தர் வேலாயுதம்பாளையம், ராயப்பன் கரூர், பேட்ரிக் சின்னதாராபுரம், கிளாடியஸ் காங்கேயம், லாரன்ஸ் பசுபதிபாளையம், அந்தோணிராஜ் சிவகங்கை, சார்ஜ் பெர்னாண்டஸ் சிவகங்கை, பிலிப் மடத்துக்குளம்,  பிரதிப் ஆயர் இல்லம் கோவை, , ஆகியோருடன் திருத்தல பங்குதந்தை அந்தோணி ஞானப்பிரகாசம் ஆகியோர் நிறைவேற்றினார்கள்.  திருப்பலி இறுதியில் கடந்த ஒன்பது வார சிறப்பு நவநாட்களின் மறையுரை போட்டிக்கான சிறப்பு பரிசுகளை அருட்தந்தையர்கள் வழங்கி பாராட்டினார்கள். திருப்பலிக்கு பிறகு சிறுபான்மையினர் நல துறை சார்பாக அரசின் நலத்திட்டம் பற்றிய தகவல்கள் கூற தமிழக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல துறை கருத்தாளர்  எம்.ஏ.ஜோசப்  ஆகியோர் சலுகைகள்பற்றிய விளக்கம் கூறினார்கள். அதனை தொடர்ந்து பேரருட்தந்தை ஜோசப் தனராஜ் அவர்கள் ஆடம்பர தேர் பவனியை மந்திரித்து துவங்கி வைத்தார்கள். ஆடம்பர தேர்பவனியானது ஆலயம் மேற்கு பகுதி வாயில் வழியாக புலியூர் கடைவீதி உப்பிடமங்கலம் பிரிவு வரை சென்று ஆலயம்  முகப்பு வாயில் வழியாக திருத்தலத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் பாடல் குழுவினர் பாடல்கள் பாடிவர திருத்தல பக்தர்கள் பக்தியுடன் செபமாலை  செபித்து வந்தனர். நிகழ்வின்  இறுதியில் திருத்தல பங்குதந்தை அந்தோணி ஞானப்பிரகாசம் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள் அதன் பின் அருட்தந்தை மரியஅந்தோணி (முன்னாள் பங்கு தந்தை) நல்லூர் திருப்பூர் அவர்கள் திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கினார்கள். ஆண்டுப்பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை அந்தோணி ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழா கமிட்டி அங்கத்தினர்,  அருட்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு மக்கள் மற்றும் திருத்தல உபகாரிகள்  ஆகியோர்  இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். அற்புத குழந்தை இயேசுவின் ஆசீரை அனை வரும் பெற்று சென்றனர்.

செய்தி மற்றும் படங்கள் பாவாணர் படமனை :- 9443363587